தென்காசி மாவட்டம்
வடகரை விவசாய பகுதிகளில் யானை ,காட்டு பன்றி போன்ற வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
அணைக்கட்டு சட்டரை அடைத்து வைக்கவும்..
காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க கோரியும்,யானைகள் அட்டகாசத்தை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும்எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் அனைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
அஇஅதிமுக வடகரை நகர செயலாளர் அலியார் தலைமையில் நடைபெற்ற இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் முகமது காசிம் மற்றும் தென் இந்திய தேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தென்னிந்திய தேசிய நதிநீர் இணைப்பு மாநில துணைத் செயலாளர் கண்ணையா, எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் திவான் ஒலி, விவசாயி இஸ்மாயில் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார்…
அஇஅதிமுக கழக பொருளாளர் சித்திக் அகமது, மாவட்ட பிரதிநிதி அப்துல் மாலிக், தீன் என்ற அப்துல் காதர் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.