பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.
திருப்பூர் மாவட்டம்
பல்லடத்தை அடுத்த சின்னக்கரை சோதனை சாவடியில் பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் இசைக்கு தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர் அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்
அதில் அந்த நபரின் பெயர் அருண்குமார் 25 என்பதும் மதுரையைச் சேர்ந்த இவர் முருகம்பாளையத்தில் வசித்து வந்ததும் மேலும் அருண்குமார் 7.50 கிலோ குட்கா கொண்டு வந்தது தெரிய வந்தது இதையடுத்து அவரை கைது செய்த பல்லடம் போலீசார் அவரிடம் இருந்து7.50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்
தொடர்ந்து அவரை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்