நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூரில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா கர்நாடகா செல்லும் சாலைகளில் இரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 26.06.2024 ஒரு நாள் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.