போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் விஷ சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இது போல் சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது
அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு போலீஸ் துறை உள்ளாட்சித் துறை நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
இதனை ஏற்று போடிநாயக்கனூரின் இதய பகுதியான தேவர் சிலை ரவுண்டானா பஸ் நிலையம் முன்பு நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் கா.ராஜலட்சுமி தலைமையில் போதை பொருள் மது போதை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி தலைமை வகித்தார் நகராட்சி பொறியாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் முனிராஜ் உதவி பொறியாளர் எம். சரவணகுமார் சுகாதார அலுவலர் மணிகண்டன் நகராட்சி கட்டிட ஆய்வாளர் சுகதேவ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துறை சார்பாக டிஎஸ்பி பெரியசாமி போடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ புஷ்பா மற்றும் போலீஸ் துறையினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.