புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்ப பயிற்சி பட்டறை வருகின்ற 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராசர் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது

தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த கலையான நாடகக் கலை உள்ளது கலையின் தாய் கலையாகவும் இன்று முற்றிலும் மறைந்து வரும் கலையாகவும் உள்ள பொம்மலாட்டத்தையும் மற்றும் நவீன நாடக நடிப்பு முறைகள் குறித்து புதிய பயிற்சிகளையும் இளம் தலைமுறைகள் நாடக ஆர்வலர்கள் கொண்டு செல்ல நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில் நுட்ப பட்டறை என்ற கருத்தையரங்கில் கலை பண்பாட்டு துறை மூலம் நடத்தப்படுகிறது.
எனவே வருகின்ற 27 வியாழக்கிழமை முதல் 29 சனிக்கிழமை வரை நடைபெறும் இந்த நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட பயிற்சி பட்டறையில் கல்லூரி பள்ளி மாணவர்கள் மற்றும் இத்துறையில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் பங்கேற்கலாம் பயிலரங்க நிறைவு நாளில் பயிற்சி பெற்ற பங்கேற்பாளர்கள் நாடக நிகழ்வை மேடையில் வழங்குவார்கள் பயிற்சி பெற்ற பங்கேற்பாளர்கள் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்வார்கள்.