பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து கிராமசபை கூட்டம் நடந்தது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வீடுகள் வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.இக்கூட்டத்தல் ஊராட்சி செயலர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.