கோவையில் மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய ஆளுநராக நித்யாயனந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது பதவி காலம் துவங்கிய முதல் நாளை கொண்டாடும் விதமாக,ஆண்டின் முதல் சேவை திட்டமாகவும், லயன்ஸ் கிளப் அக்ஷயம் சார்பாக சேவை திட்டங்கள் மற்றும் அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆதரவற்றோர்,மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் உள்ளவர்களுக்கு பழங்கள்,பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது..
இதனை தொடர்ந்து கோவை காந்திமா நகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஜெர்சி பனியன்கள் ஆகியன வழங்கப்பட்டன.
இதே போல பள்ளியில் உள்ள நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவைகளை,லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.பள்ளியில் விழாவில் தலைமயாசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆர் மீரா மதர்ஸ் வில்லேஜ் லயன்ஸ் சங்கம்,சுப்ரீம் கிளப் லயன்ஸ் சங்கம்,லயன்ஸ் கிளப் ஆப் அன்பு,திருப்பூர் கிரேட்டர் லயன்ஸ் சங்கம்,மற்றும் சிறுசேவை அறக்கட்டளை ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
இந்த விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக, பன்னாட்டு லயன்ஸ் சங்க 324 சி மாவட்ட ஆளுநர் நித்யானந்தம்,முன்னால் ஆளுநர் ராம்குமார்,முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர்,இரண்டாம் துணை நிலை ஆளுநர் பி.எஸ்.செல்வராஜ்,ஜி.ஏ.டி.ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால்,ஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,வட்டார தலைவர் கர்ணன்,லயன்ஸ் கிளப் ஆப் அக்ஷயம் தலைவர் சிவராஜ்,சார்ட்டர் பிரசிடென்ட் ஷீபா கர்ணா,செயலாளர் அட்மின் செந்தில் ராஜன்,செயலாளர் ஆக்ட் கோவிந்தராஜன்,பொருளாளர் கவிதா,முன்னால் தலைவர் சந்திரபிரபா,உட்பட பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.