கம்பம் நகரில் 24 மனை செட்டியார்கள் பேரவை சார்பில் மாநில மாநாடு 5 லட்சம் பேர் குடும்பத்தோடு பங்கேற்க முடிவு.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் சேலத்தில் 24 மனை செட்டியார்கள் பேரவை மாநில மாநாடு 5 லட்சம் பேர் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலத்தில் 24 மனை செட்டியார்கள் பேரவை சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 16-ந்தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முன்னேற்பாடுகள் பணி குறித்து மாநில, உயர்நிலை குழு ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகரில் உள்ள பி.எல். ஏ. கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு,தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும்,24 மனை செட்டியார்கள் பேரவையின் நிறுவனருமான பி.எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன்,பொதுச் செயலாளர் சுப்பிரமணி தென்னவன்,துணைத் தலைவரும் புலி குத்தி ஊராட்சி மன்ற தலைவருமான பி. எஸ். பி. சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கொடுமுடி தங்கராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில்,சேலம் மாநாட்டில் எங்கள் சமுதாய மக்களுக்கு குறிப்பாக விடுபட்டு போன மூன்று உட்பிரிவுகளுக்கும் எம்.பி.சி.பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் ரயில் சேவை கிடையாது
இதனை தீர்க்கும் வகையில் திண்டுக்கல் சபரிமலைக்கு கம்ப மொழியாக ரயில் சேவை வேண்டும் மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடக,கேரளா அரசுகள் தமிழக விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் தடுப்பணைகள் கட்டக் கூடாது.
சிதிலமடைந்து கிடக்கும் கண்ணகி கோவிலை புனரமைக்க வேண்டும்.அயோத்தியில் ராமர் கோயிலை எப்படி உருவாக்கினார் களோ அதேபோன்று பிரம்மாண்டமான கூடலூர் அருகே உள்ள பளியன் குடியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலை அமைக்க வேண்டும்.
மாதந்தோறும் தமிழக பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்.தமிழக பக்தர்கள் சென்று வர பழைய பளியங்குடி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
லோயர் கேம்பில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். என்பது உள்பட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன
இது குறித்து ஜெகநாத் மிஸ்ரா கூறும்போது
தமிழகத்தில் 24 மனை செட்டியார்கள் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகிறோம்.
24 மனை செட்டியார்கள் என்பது 16 மனை மற்றும் 8 மனை என்பதை குறிக்கும் .இரண்டும் சேர்ந்து சம்மந்தி உறவு முறையாகும்.
16 மனை, 8 மனை என்ற உறவுகளை கொண்ட எங்களது இனத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 16.8.24- என்ற தேதி வருகிறது. இந்த தேதியானது.
ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். இதில் 16 என்ற தேதி, 16மனையையும்,8 -ம் மாதம் என்பது 8 மனையையும், 24-ம் வருடம் என்பதை எங்களுடைய 24 மனைசெட்டியார்களை குறிப்பதாக வே
நாங்கள் கருதுகிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த தேதியில்,உலகமெங்கும், வாழும் எங்களுடைய 24 மனை செட்டியார்களை ஒன்றுதிரட்டி, மாபெரும் மாநாட்டை சேலத்தில் நடத்த இருக்கிறோம்.
இந்த மாநாட்டில் தமிழக அளவில் 2023-24-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற , மாணவ, மாணவியர்கள் 1024 மாணவ மாணவிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் மூலமாக கல்வி பரிசளிப்பு விழாவும்,நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாமும், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மணமாலை நிகழ்ச்சியும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வர்த்தக அரங்குகளும்,அமைக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அழைப்பு விடுத்து இருக்கிறோம். இதேபோல் அனைத்து சமுதாய, தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம்.
மேலும்,மாநாட்டில் எங்களின் தொப்புள்கொடி உறவுகளான, 108 வகை செட்டியார்களுக்கும்அழைப்பு அனுப்ப உள்ளோம்.மாநாட்டிற்கு முன்னதாக, சேலம் ஓமலூர் சாலையில், நீர்வளம்- மண்வளம் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், பேரணி நடைபெறுகிறது.
மேலும் அரசியல் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கு நடைபெறும்.
இந்த மாநாட்டில் தமிழகம்,கேரளா,
கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் குடும்பத்தோடு கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில்,தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்த மணி,ரகுபதி,மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சுறா,உள்பட மாநில,மற்றும் மாவட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து செட்டியார்கள் பேரவை நிர்வாகிகளை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் அனைவரையும் வரவேற்று கனிவுடன் உபசரித்தார்