விஷ சாராய சாவுகளை தடுக்க பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வு என்று. மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை வலி யுறுத்தும் வகையில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி மதுரையில் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்து இறப்பது தொடர்கதையாக உள்ளது. அதற்கு டாஸ்மாக் மது விற்பனை தீர்வு ஆகாது. டாஸ்மாக் மது அருந்தும் இளம்தலைமுறையினர் தங்க ளின் ஆற்றலை இழந்து வரு கின்றனர்.
இதனால் நாட்டுக்கு பேரிழப்பு. இதற்கு பூரண மது விலக்குதான் தீர்வு. மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நடிகர் விஜய் அப்படி கூறியுள்ளார்.
தமிழக அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு நல்லபெயர் கிடைக்கும் என்றார்.மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி
பூரண மதுவிலக்கு மட்டுமே தீர்வு…
விஷ சாராய சாவுகளை தடுக்க பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வு தொல்.திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
இதை வலி யுறுத்தும் வகையில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி மதுரையில் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்து இறப்பது தொடர்கதையாக உள்ளது. அதற்கு டாஸ்மாக் மது விற்பனை தீர்வு ஆகாது. டாஸ்மாக் மது அருந்தும் இளம்தலைமுறையினர் தங்க ளின் ஆற்றலை இழந்து வரு கின்றனர்.
இதனால் நாட்டுக்கு பேரிழப்பு. இதற்கு பூரண மது விலக்குதான் தீர்வு. மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நடிகர் விஜய் அப்படி கூறியுள்ளார். தமிழக அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு நல்லபெயர் கிடைக்கும் என்றார்.
தொல் திருமாவளவன் எம்.பி பேட்டியின் போது துணை பொது செயலாளர் பெ.ஆற்றலரசு,
பாலாஜி எம்.எல்.ஏ , கனியமுதன், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணை செயலாளர் ஏ.ஆர்.அய்யங்காளை, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அகரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருவேலம்பட்டி முத்துக்குமார், மதுரை தெற்கு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஆதி வளவன் ,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தோப்பூர் நந்தன் , இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் சம்பக்குளம் அக்கினியான் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்