செங்குன்றம் செய்தியாளர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடி மற்றும் அவனது கூட்டாளியை கைது செய்த போலீசார் அவர்கள் கடத்தி வந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த ஈச்சேர் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட மூட்டைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆறுமணிகண்டன் ( வயது 26) தேனாம்பேட்டை எம்கே நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர்கள் ஈச்சேர் வாகனத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து இங்கு சென்னையில் விற்பனை செய்வதாக தெரியவந்தது…
மேலும் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சி கேட்டகிரி எனப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான இவர்கள் இருவரின் மீதும் கொலைமுயற்சி , அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளதாகவும் தலைமறைவாக இருந்த இவர்கள் தற்போது கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இவர்கள் இருவரின் மீது செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருத்த 32 கிலோ கஞ்சாவையும் ஈச்சர் வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். ஒரே நேரத்தில் 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளையும் கைது செய்த போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.