அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை
பேரூராட்சியில் ஸ்ரீ நத்தம் மாரியம்மன் கோவில் திடல் அங்குள்ள அங்கன் வாடி மையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
வட்டார சுகாதார மேற்பார்வை கங்காதரன்,
முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால், மற்றும் சொரிமுத்து ஆகியோர்
முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி சேர்மன் எம். சுதா மோகன்லால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்,
கிராம செவலியர் சுகந்தி, அங்கன்வாடி பணியாளர்
வசந்தா ரோஸ்லின் உதவியாளர் செல்லம்மாள்
மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்