திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மன்னவனூர் கிராமப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் தற்போது கரடி ஒன்று உணவு தேடி ஊருக்குள் உலாவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் கரடியை கண்காணித்து வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.