திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் வலங்கைமான் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவமனையில் பணிபுரியுஔம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.கோவிந்தராஜன், செயலாளர் க.குமரன், பொருளாளர் என்.குமரவேல், சாசனத்தலைவர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் அன்பு பிரபு, என்.ராஜராஜ சோழன் மற்றும் உறுப்பினர்கள் ராயல் கோ.திருநாவுக்கரசு, டி.வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.