கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் அரசனட்டி பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் தேர்ட் ஐ டான்ஸ் கம்பெனியின் இரண்டாம் ஆண்டு மாபெரும் நடன நிகழ்ச்சி மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான உடை அலங்காரப் போட்டி மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
மேலும் சிறந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கான வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளனியுமான தர்ஷு சுத்தரம், பாசிட்டிவ் விக்கி ஆகியோர் தொகுத்து வழங்கினர்,
கலக்கப்போவது யாரு சீசன் 9 போட்டியாளர் சரவணன் அய்யனார் கலந்து கொண்டு பல குரல்களில் பேசி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார், சிறப்பு விருந்தினர்களாக கண்ணன் திமுக, நாகராஜ் திமுக, லீலா குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நவீன் குமார், ஸ்ரீ லட்சுமி நவீன் குமார், பிஜேபி கட்சியின் மாவட்டத் தலைவர் நாகராஜ், ஓவியா டிஜிட்டல் ஸ்டுடியோவின் உரிமையாளர் உமாசங்கர், முனிராஜ் பாமக, மணி பாமக, ரமேஷ் பிஜேபி, பாலச்சந்தர், ராஜேஷ் குமார், ஜெயச்சந்திரன், புஷ்பா பாண்டியன் ஸ்டோர் உரிமையாளர், கேபிஎன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், பிரதிவின் டிராவல்ஸ் உரிமையாளர், ஹோட்டல் 5 சட்னி உரிமையாளர், ஜெய் மாருதி பில்டர்ஸ் உரிமையாளர், ஏகேபி பில்டர்ஸ் உரிமையாளர், எம்எஸ் குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்ட் ஐ டான்ஸ் கம்பெனியின் மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமிகள் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் தேர்டு ஐ டான்ஸ் கம்பெனியின் உரிமையாளர் ஈரோடு கௌரிஷ் அவர்களால் வழங்கப்பட்டு மாணவ மாணவிகள் ஊக்கப்படுத்தப்பட்டனர்
இந்த மாபெரும் நிகழ்ச்சியை எந்தவித தொய்வும் இல்லாமல் சிறப்புற நடத்திய ஈரோடு கௌரிஷ் அவர்களை முக்கிய பிரமுகர்கள், போட்டியில் பங்குபெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.