விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலைகள் சேத்தூர் காமராஜ் நகர் அருகே சிமெண்ட் சென்டர் மீடியன் உள்ளது இதில் இடது புறம் வலது புறம் என தனித்தனியாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது இந்நிலையில் மதுரையிலிருந்து தென்காசியை நோக்கி பல சரக்கு ஏற்றி சென்ற லாரிசாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது.
மோதிய வேகத்தில் லாரி இடது புறம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி வயது 40 என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவாஸ்தீன்(நெடுஞ்சாலை) சேத்தூர் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் எஸ்ஐ கள் கோல்டு அந்தோணி ராஜ். சரவணன் மற்றும் சேத்தூர் போலீசார் விரைந்து சென்று லாரியை அகற்றி போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தினர் மேலும் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் பேரிகார்டு அமைத்து இரவு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினர்