செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தெள்ளார் தீயணைப்பு துறையினர் சார்பில் மாணவர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு, தீவிபத்தை தடுக்கும் வழிமுறைகள், நீர் நிலை பாதுகாப்பு உள்ளிட்டவைகள் பற்றிய செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள், தீயணைப்பு நிலைய அலுவலர் வி. ரமேஷ் மற்றும் தீயணைப்புத்துறையினர் பலரும் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர். ஆசிரியை அகிலாண்டம் நன்றி கூறினார்.