செய்யூர் அருகே இரணியசித்தி கிராம ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு ECR சாலை பணிகளுக்காக நாள்தோறும் 50 கிரஷர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது பெய்த பலத்த மழையால் லாரிகளில் கொண்டு செல்லும் போது சிதறி விழும் மண் மழை நீரில் நனைந்து சாலை முழுவதும் சேறு மண்ணாக மாறியுள்ளது இதனால் செய்யூர் முதல் பவுஞ்சூர் வரை செல்லும் சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
லாரிகளில் கொண்டு செல்லப்படும் மண் உரிய விதிகளை பின்பற்றி எடுத்து செல்ல வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்