தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் வைத்து “பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது.
இதில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) காந்திமதி தலைமை தாங்கினார்.
மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொருளியல் முதுகலை ஆசிரியர் ராமலக்ஷ்மி முன்னிலை வகித்தார்.
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) காந்திமதி தலைமை யுரையில் பெண் குழந்தைகளின் பள்ளி கல்வி உதவி தொகை, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், புதுமை பெண் திட்டம் ஆகியன ஆகும். இந்த திட்டங்களை மாணவிகள் முழுமையாக பெற்று பயன் அடைய வேண்டும்.
மாணவிகள் இடை நிலை கல்வி, மேல் நிலை கல்வியை படிக்கும் போது பல தடைகளை கடக்க வேண்டியுள்ளது. ஆதலால் மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்டு, நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர் கல்வி பயில வேண்டும் என்று பேசினார்