திருப்பூர் மாவட்டம்,
பல்லடம், இது பற்றி அதன் தலைவர் மணிக்குமார் கூறியதாவது பல்லடம் வட்டாரத்தில் சுமார் 6 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் ஆயிரக்கணக்கான பேக்கரிகள் பழக்கடை மளிகை கடைகள் இறைச்சி கடைகள் உள்ளன

இவைகளை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் நுகர்வோர்களுக்கு தரமான உணவு பொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் வணிகர்களுக்கு அனுமதி சான்று வழங்கவும் முறைகேடுகள் செய்யவும் வணிகர்கள் கடை மீது வழக்குத் தொடுக்கவும் அபராதம் விதிக்கவும் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு துறை உள்ளது

இதன் அலுவலராக தற்போது கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியில் உள்ளார் கடந்த நான்கு மாதங்களில் முறைகேடாக செயல்பட்ட 56 உணவு பொருள் விற்பனை கடைகள் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

மேலும் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையுடன் இணைந்து ஆன்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது

இதன் பேரில் அடிக்கடி கோர்ட்டுகளுக்கும் செல்ல வேண்டிய நடைமுறைகள் உள்ளன வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு என்பது தனி வட்டாட்சியர் பதவிக்கு சமமானது அவரின் வாகன வசதிக்காக ஒரு ஜீப் வழங்கி இரண்டு உதவியாளர்களை நியமிப்பது மிக மிக அவசியம் அரசு இதை உணர்ந்து அலுவலரின் பணி சுமையை குறைத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் இவ்வாறான நிலையில் பல்லடத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கான தனி அலுவலகம் இல்லாமல் நிர்வாகம் பணிகளில் சுணுக்கம் ஏற்பட்டுள்ளது

முன்பு பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு அறையில் இயங்கி வந்த அலுவலகம் மருத்துவமனை நிர்வாகத்தால் காலி செய்ய வைக்கப்பட்டு தற்போது நிரந்தர இடம் அலுவலகம் இல்லாமல் நாடோடியாக ஆதரவற்ற துறைபோல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது

பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்ட நுகர்வோர் பொதுமக்கள் அலுவலரை சந்தித்து பேசவும் புகார் அளிக்கவும் உணவுப்பொருள் வணிகர்கள் அனுமதிச்சான்று பெறவும் சிரமம் ஏற்படுகிறது மேலும் போதுமான உதவியாளர்கள் இல்லாமல் செயல்பட்டு கலப்பட உணவுப் பொருட்களையும் முறைகேடுகளையும் எதிர்த்து போரிட்டு வருகிறார்

பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கலப்பட காலாவதி உணவு பொருள் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 6 லட்சம் நுகர்வோர்களை பாதுகாக்க வட்டார உணவு பாதுகாப்புத் துறை நிர்வாகத்திற்கு அலுவலகம் இல்லாமல் இருப்பது ஒரு அலுவலரை மட்டும் நியமித்திருப்பதும் முறையானது போதுமானது அல்ல இது ஏற்புடையதும் அல்ல பல்லடத்தில் சில அரசு துறை கட்டிடங்களில் சில இடத்தில் அறைகள் காலியாக உள்ளது

இதில் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு ஒரு அலுவலகம் ஒதுக்கி தரவும் கூடுதலான உதவியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்தி கடந்த கால மாவட்ட ஆட்சியரின் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்லடம் நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொண்டும் மாவட்ட நிர்வாகம் அதன் மீது கவனம் கொள்ளாமல் இருப்பது என்ன காரணத்தினால் என தெரியவில்லை

எனவே பல்லடம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலருக்கு பல்லடம் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள கட்டிடத்திலோ அல்லது பஸ் நிலையம் எதிரிலோ உள்ள அரசுத்துறை கட்டிடத்திலோ அல்லது பொள்ளாச்சி ரோடு கால்நடை மருத்துவமனை வளாகத்தின் காலியாக உள்ள கட்டிடத்திலோ ஒரு அறையை ஒதுக்கி தரவும் கூடுதலான பணியாளர்களை நியமிக்கவும் உரிய வாகன வசதி வழங்கவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *