தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு
தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் இயக்கம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி ஊக்க த்தொகை வழங்கி சாதனையாளர் விருது கொடுத்து கௌரவம் செய்யப்பட்டது
மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி விஜயலட்சுமி தமிழ் வேந்தன் ஆகியோர் ஊக்கத்தொகை வழங்கினார்கள். பழனி ராஜா சாதனையாளர்கள் வாங்கினார் ஹீரோ ஸ்டார் இயக்க தலைவர் ஸ்டார் ராஜதுரை நிகழ்ச்சியை ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் புகழேந்தி தபால் துறை அதிகாரிஜெயபிரகாஷ் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் இருபால் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்