ஜூலை;-06
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்தில சத்துணவு திட்டத்தின் சமூக தணிக்கை சத்துணவு மையங்களில் கடந்த 1-ம் தேதி தொடங்கி
5 -ம் தேதி வரை நடைபெற்று வந்த நிலையில் சமூக தணிக்கை நிறைவு நாளை யொட்டி, சிறப்பு வார்டு கிராம சபைக் கூட்டம் ஆலங்குளம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில்) சமூக தணிக்கை சிறப்பு வார்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால் தலைமை வகித்தார் ஆலங்குளம் வட்டார
சமூக நல விரிவாக்க அலுவலர் பாத்திமா பீவி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் சங்கர சுப்பிரமணியன், டிடிடிஏ பள்ளித்
தலைமை ஆசிரியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்துசெல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் தொடர்பான திட்டங்களை எடுத்து கூறி, பொதுமக்கள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால், சந்திரசேகர், பணியாளர்கள் எபநேசர், லெட்சுமணன், தொழிலதிபர் வரிவசூலர் அலுவலகப் இசக்கிமுத்து, தமிழ்மணி,
சத்துணவு அமைப்பாளர் முத்துமணி, அன்னபுஷ்பம்
மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.