பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 05.07.2024 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்தும் சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்பநாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆகிய பிரிவுகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தொடுதல் குறித்த விழிப்புணர்வினை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஆகியவை பற்றிய விழிப்புணர்வுகளும் மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் போதைப் பொருட்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவற்றிற்கு அடிமையாகின்றனர்.

எனவே மாணவர்கள் காவல்துறையினர் ஏற்படுத்தும் விழிப்புணர்வு குறிதது தங்களது பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் மேலும் தங்களது பகுதிகளில் எவரேனும் கள்ளச்சராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் கூறும் நபரின் முகவரி உள்ளிட்ட விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *