திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், மூலவாஞ்சேரி ஊராட்சி காருகுடிக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் டெல்லி பாராளுமன்ற கூட்டத்தை முடித்து விட்டு நேராக தன் வீடு செல்லாமல் வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் கே. செல்வராஜ் மகள் நிவேதா திருமணத்திற்கு வந்து நலம் விசாரித்து வாழ்த்துக்கள் கூறினார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் சிறப்பான முறையில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார், மாணவப் பெருமன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், செயலாளர் சின்ன ராசா, ஒன்றிய குழு உறுப்பினர் மருதையன், கிளைச் செயலாளர்கள் ரகுபதி, கோவிந்தகுடி பன்னீர்செல்வம், ஊத்துக்காடு மகேந்திரன், செயலாளர் சத்யராஜ், அவிச்சாகுடி ரகுபதி, கிராம முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள், நாட்டாமை, பஞ்சாயத்து அனைவரும் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.