அலங்காநல்லூர்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சிந்தனைவளவன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா, ஆவண மைய மாவட்ட அமைப்பாளர் வடகள் பூமி, மனாவரணி துணை அமைப்பாளர் அன்பழகன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன், தமிழழகன் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.