திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில்100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்கள் இட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி ஆர் பாண்டியன். மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் பிரச்சனையில் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூட விவசாயிகள் சொல்லக்கூடிய குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் சொந்த மாவட்டமான திருவாரூரில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என பேசினார்.
மேலும் மாவட்ட ஆட்சியருக்கு எதற்கு கார் கொடுக்கப்பட்டுள்ளது? அந்த காரை வைத்துக்கொண்டு ஏதேனும் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தாரா ? கடந்த காலங்களில் மழையால் குருவை சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட பொழுது வயலில் இறங்கி பாதிக்கப்பட்ட பயிர்களை பார்த்தாரா என காட்டமாக விமர்சித்தார்