ஊத்தங்கரை,ஜூலை.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் டிட்டோஜாக் கூட்டமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டச் செயலாளர் பழனி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் சுரேஷ்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடக்கக் கல்வித் துறையை பாதிக்கும் அரசாணை 243 ரத்து செய்த கோரியும், பங்களிப்பை ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு அனுமதிக்க கோருதல் , இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு நீக்குதல் உள்பட 31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டச் செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிலீலா கிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டார பொருளாளர் சாமுவேல் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியாக தங்கராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *