விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் பேரூராட்சி நகரம் இங்கு நெசவுத்தொழில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதகளவில் உள்ள அதிக மக்கள் வசிக்கும் பகுதி இந்நிலையில் காலையில் எழுந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர் காரணம் அனைவரின் போனிலும் அதிகாலை மாரியம்மன் கோவில் பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிசிடிவியில் பதிவான கரடியின் நடமாட்டத்தை வெளியிட்டதுதான்
இதுகுறித்து அச்சமடைந்த மக்கள் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின்பேரில் வனத்துறையினர் வந்து புத்தூர் கம்மாய் மற்றும் பல இடங்களிலும் கரடியை தேடி வருகின்றனர் இதனால் இங்கு பரபரப்பான சூழ்நிலை உறுவாகியுள்ளது
