கும்பகோணம் அல் அமீன் கல்லூரி முதலாமாண்டு கல்வி தொடக்க விழா
கும்பகோணம் அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழா கல்லூரியின் தாளாளர் ஹாஜி எம். கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் எஸ். பூர்ணிமா சிறப்புரையாற்றினார்
அப்போது அவர் பேசியதாவது பெண்களின் முன்னேற்றம் கல்வி அறிவால் மட்டுமே சாதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாக பின் தங்கியிருந்த பெண்களின் நிலை கல்வியால் மட்டுமே மாறியுள்ளது. முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் மூன்றாம் ஆண்டு முடிவதற்குள் ஓர் இலக்கினை நிர்ணயம் செய்து அதை அடைய வேண்டும் என்றார்.
இதனையடுத்து மாணவர்களுக்கு அரசினர் கலைக்கல்லூரியின் தமிழ் இணை பேராசிரியரான எஸ். கோபாலகிருஷ்ணன் ஊக்க உரையாற்றினார்.
விழாவில் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளர் ஹாஜி எம். என். முகமது ரஃபி, மற்றும் உதவித் தலைவர்கள், உறுப்பினர்கள், கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் எம். நஜிமுதீன், முதல்வர் நா. அன்பரசி, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாட்டினை பேராசிரியர்
மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.