தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், பிரசவ வார்டில் சிகிச்சை பெற்ற 2 கர்ப்பிணிகளுக்கு, இதயநோய் பாதிப்பு இருந்தது.
இதனால் அவர்களை பரிசோதனைக்கு அழைத்து செல்வதற்காக, ஒரே ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒப்பந்த பணியாளர் ஒருவர் தள்ளி சென்றார். தொடர்ந்து, கர்ப்பிணிகள் இருவரை ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்ற தனியார் நிறுவன ஒப்பந்த நிறுவன பெண். பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநோயாளியை வெளியே அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் பெண் ஒப்பந்த பணியாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், அரசு மருத்துவ மனையில் சமீபகாலமாக ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு ஆள் பற்றாக்குறை, நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.