திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமை ஏற்று பேசிய விஜய் இளைஞர் பெருமன்ற அமைப்பு நிலைகள், நோக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்.
மாவட்ட செயலாளர் துரை அருள் ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார் இளைஞர்கள் கடமைகள் குறித்து பேசினார்கள்.
இளைஞர் பெருமன்ற வலங்கைமான் ஒன்றிய செயலாளர் வி. பாக்யராஜ் நடந்துள்ள வேலைகள் குறித்து பேசினார், இளைஞர் பெருமன்றம் ஒன்றிய துணைத் தலைவர் தமிழ் லெனின்,கே.சுதாகர், மார்ச் எஸ்.சுதாகர், மன்ற கிளைச் செயலாளர் அஜித் பங்கு பெற்றார்கள்.
கூட்டத்தில் வருகின்ற 27-ந்தேதி வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் இளைஞர்கள் எழுச்சி மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.