ராஜபாளையம் துப்புரவு தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் பொது தொழிற்சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
மேலகுன்னக்குடி, புதுசென்னாக்குளம், சொக்கநாதன்புத்தூர், முதுகுடி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதி தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பல முறை மனு அளித்தும், நேரில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை 10 மணி முதல் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் பொது தொழிற்சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது சொக்நாதன்புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்காக வட்டாச்சியர் மற்றும் அலுவலர்கள் சென்றுவிட்டபடியால் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டாட்சியர் மற்றும் சமூக நலத்துறை, பொதுப்பணித்துறையினரோ யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் செய்வதறியாது இருந்தனர்.பின்னர் மதியம் 2 மணியளவில் வட்டாச்சியர் வந்து கொரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக தெரிவித்தார் சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் மற்றும் ஆண்கள் பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.