பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20.
திருப்பூர் மாவட்டம்,
பல்லடத்தை யா டுத்த இடுவாய் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து மங்கலம் காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான போலீசார் இடுவாய் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்
அதில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மலைச்சாமி 26 என்பவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்
விசாரணையில் அவன் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது மேலும் அவனிடமிருந்து சுமார் 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது
மேலும் மலைச்சாமி இடம் விசாரணை மேற்கொண்டதில் மலைச்சாமியின் கூட்டாளியான இடுவம்பாளையத்தை சேர்த்த தினேஷ் குமார் கௌதம் ஆகியோர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரிய வரவே அவர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது
மேலும் அவர்கள் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர் பல்லடம் அருகே சட்ட விரோதமாக 800 போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.