தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் கரிவலம் வந்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பொறுப்பு தலைமை ஆசிரியை சிதம்பரம் தலைமை தாங்கினார் களப்பணியாளர் எம். மேரி அனைவரையும் வரவேற்று பேசினார் ஆசிரியை .சுமதி முன்னிலை வகித்தார் களப்பணியாளர் . வேலம்மாள் நோக்கம் குறித்து பேசும்
போது, பெண் குழந்தைகளின் பள்ளிக்கல்வி உதவித்தொகை, செல்வமகள் சேமிப்பு திட்டம், புதுமைப்பெண் திட்டம், உயர்கல்வி பயில்வதற்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் விவரித்துக் கூறினார்.
இதனை பயன்படுத்தி உயர்கல்வி பயின்று உயர் பதவிகளில் வகிக்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் எந்த ஒரு ஆணடனும் நெருங்கிய உறவாக இருந்தாலும் கூட இடைவெளியை கடைப்பிடித்து நடக்க வேண்டும் குழந்தை திருமணம் எங்கேயாவது நடப்பதாக இருந்தால் 181,1098 ஆகிய நம்பருக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் அதை பார்த்துக் கொள்வோம் என்று பேசினார்.
இறுதியாக களப்பணியாளர் பரமேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார் இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள்
கலந்து கொண்டனர்.
அதனை யெடுத்து அங்குள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இக்கூட்டம் நடத்தப்பட்டது இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மஸ்தூர், பணியாளர்கள், பொதுமக்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை குழந்தை உரிமையும் நீங்களும்,பெங்களூரு, திருநெல்வேலி மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் சேர்ந்து செய்திருந்தார்கள்.