நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
திருக்குவளை அருகேயுள்ள செரநல்லூர் ஸ்ரீ செல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கச்சநகரம் செரநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி கணபதி ஹோமம் நடைபெற்றுது.
தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று இரண்டாம் கால பூஜைகள் நிறைவுப்பெற்று மகா பூர்ணாஹூதி நடைப்பெற்றது.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓத கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கிராம திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.