இளம் தலைமுறை கல்லூரி மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதமாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் விதமாக,இரத்தினம் கல்லூரி வளாகத்தில் புதிய ஆராய்ச்சி கூடம் துவங்கப்பட்டது.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர். மதன்.ஆ.செந்தில் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், செயலாளர் முனைவர்.மாணிக்கம், துணைத் தலைவர் முனைவர். நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை இயக்குனர் முனைவர்.சி.உமா ராணி கலந்து கொண்டு, இரத்தினம் ஆராய்ச்சி கூடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கல்லூரியின் தலைவர் மதன் ஏ.செந்தில் பேசுகையில்,மாணவர்கள் கல்லூரியில் புத்தகத்தோடு நின்றுவிடாமல் செயல்படுத்த வேண்டும்.

புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை மாணவ சமுதாயம் உருவாக்கவே,இது போன்ற ஆராய்ச்சி கூடங்களை திறப்பதாக அவர் கூறினார். மேலும் இந்த ஆராய்ச்சி கூடத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள், காப்புரிமைகள், அரசின் நிதி பெற்று புதிய திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த இந்த ஆராய்ச்சி கூடம் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் இரத்தினம் ஆராய்ச்சிக் கூடத்தின் மூலம் அரசின் பல்வேறு துறையின் ஆராய்ச்சி நிதியாக ரூபாய் 25 கோடி பெறப்பட்டுள்ளது. வரும் ஐந்து ஆண்டில் ஆராய்ச்சி நிதியாக ரூபாய் 50 கோடி பெறுவதே நமது நோக்கமாகும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து,
பேசிய , அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை இயக்குனர் முனைவர்.சி.உமா ராணி, சிறப்பு விருந்தினர் பேசுகையில்,உலகம் நவீன தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருப்பது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் செய்யக்கூடிய ஆராய்ச்சிகளே ஆகும்.

உலகளவில் நமது நாட்டின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புதுப்புது கண்டுபிடிப்புகளும், அதற்குரிய காப்புரிமைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு இது போன்ற ஆராய்ச்சிக் கூடங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *