விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மரம் செடி கொடிகள் வளர்ந்துள்ளது. மேலும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆங்காங்கே விரிசலும் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது இரும்பினால் ஆன மேம்பாலம் ரயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது இந்த இரும்பு பாலத்தை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மாற்றி வைத்து பின்னர் பணியை துவங்க வேண்டும் இதற்காக நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் அந்தப் பகுதியில் பணிய முடியும் வரை ரயில் போக்குவரத்து நிறுத்துவதற்காக அனுமதி கடிதம் அளித்துள்ளனர் .
இதுகுறித்து ரயில்வே துறையில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மேம்பால பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இதனால் மேலும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஏற்படும் என்று தெரிய வருகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் மேம்பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.