தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமண தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் அளவிலான பிரச்சனைகள் மற்றும் மனதளவிலான பிரச்சனைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
மேலும் குழந்தை திருமணம் செய்தால் அதற்கான தண்டனைகள் மற்றும் சட்டங்கள் பற்றியும் கூறப்பட்டது.
மாணவ மாணவிகள் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற உதவும் அரசு திட்டங்களான புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் பற்றியும் கூறப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், வட்டார மருத்துவ அலுவலர், சகி-ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி, மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்ட ஆலோசகர் மற்றும் சமூக விரிவாக்க அலுவலர் உள்பட 250 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை
வாசுதேவநல்லூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.