கோவையில் பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியில் கோவை, மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 78 அணிகள் பங்கேற்றனர்.
கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 45 வது ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் காளப்பட்டி பகுதியில் உள்ள அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான நடைபெற்ற போட்டியில்,கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம்,கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகளை சேர்ந்த 78 அணிகள் கலந்து கொண்டன…
5 தனித்தனி கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பந்தை லாவகமாக மாணவர்கள் அடித்து விளையாடினர்..நாக் அவுட் முறையில் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் சிறந்த வீர்ர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் கல்வி கற்பதோடு விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன் ராமச்சந்திரன் தெரிவித்தனர்.