அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்வது வழக்கம்.
அது போல் கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த கமிட்டியின் பதவிக்காலம் முடிவுற்றதை தொடர்ந்து 2024 முதல் 2027 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைபெற்றது.
பாரம்பரிய வழக்கப்படி பாலமேடு கிராம பொதுமக்கள் முன்னிலையில் சமுதாய தலைவர்கள் ஒன்று கூடி பழைய நிர்வாகத்தினுடைய வரவு செலவுகள் அங்குள்ள கோவில் முன்பு வாசித்து ஒப்படைக்கப்பட்ட பின்பு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் தலைவராக மச்சவேல், செயலாளராக பிரபு, பொருளாளராக கார்த்திக் ,ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேவராஜ் ,சரவணன், சேகர், குணசேகர், நிதீஷ்குமார், மணி, கந்தசாமி, முத்து, செல்வம் ஆகியோரும் நிர்வாக குழுவிற்கு உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நிர்வாக குழு கூட்டம் தலைவர் மச்சவேல் தலைமையில் செயலாளர் பிரபு பொருளாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாலமேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர கால தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை வெகு சிறப்பாக நடத்துவது அதேபோல் பாலமேடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இந்த நிர்வாக குழு மூன்று ஆண்டுகளுக்கு பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடைபெறும். என்பது குறிப்பிடத்தக்கது.