மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வாகன பரப்புரை குழுவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நடத்தி வருகின்றனர்.

இந்த பரப்புரை பயணத்தின் மூன்றாம் குழு புதுச்சேரி முதல் சேலம் வரையிலான வாகன பயணத்தை திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தொடங்கிவைத்தார்.
இப்பரப்புரை பயணக்குழு நேற்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அச்சிறுபாக்கத்தில் வாகனப்
பரப்புரைப் பயணக்குழு தனது பரப்புரை கூட்டத்தினை நடத்தியது பரப்புரை பயணக் குழுவிற்கு திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தோழர்.தா.தம்பி பிரபாகரன் தலைமை தாங்கினார்.

வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளரும்
மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான கோ.வேலு முன்னிலை வகித்தார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஒன்றிய அரசு
நீட்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைவிளக்கியும் வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி நடத்தி வருகிற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைமைப் பிரதிநிதி அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான் தலைமையில் கதர்ஆடை அணிவித்து புத்தகம் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீட்தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *