சோழபுரம் நகர அ.தி.மு.க சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு துண்டு பிரசுரம் முக்கிய கடைவீதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரில் சென்று அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமை தாங்கினார் நகர செயலாளர் ஆசாத் அலி,முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் அழகு.த.சின்னையன்,முன்னாள் மாவட்ட செயலாளர் பொன்.தா. மனோகரன்,மாவட்ட விவசாய பிரிவு இணைச்செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி பாரதிமோகன்,முன்னாள் எம்எல்ஏ ராமநாதன்,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டு போதை ஒழிப்பு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அப்போது மாவட்ட கழக செயலாளர் பாரதி மோகன் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சீர்கேடு அடைந்து தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது,போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு
தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கடைசி சொட்டு போதை ஒழிப்பு வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்.
இதனையடுத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதைப் பொருள் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், இளைய சமுதாயத்தின் எதிர்கால உரிமைக்குரல் எழுப்பி வருகின்றோம்.
போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும், ஐ.டி. துறையினருமாகிய இளைய தலைமுறைதான் இதற்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர்,மகளிர் அணி தலைவர் கவிதாஸ்ரீதர்,கோட்டை அமீர் அய்யூப்கான்,சோழபுரம் பேரூராட்சி கழக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.