தஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். ஜூலை-13. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில் ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகா தற்போது தேக்கி வைத்துள்ள தண்ணீரை உடனடியாக டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறந்து விட வேண்டும்.
கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். திருச்சி மேகநாதன், கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் பரமசிவம், தஞ்சை மகேந்திரன், ஜான் மெல்கியோ ராஜ், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், பருத்தி கோட்டை சங்கர், தஞ்சை மாவட்ட செயலாளர் மதி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விவசாய சங்கத்தினர் பானை மற்றும் செடிகளை தலையில் சுமந்து கலெக்டரிடம் நேரடியாக மனு அலுவலகத்திற்கு நுழைய முற்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் கதவை மூடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கதவு திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் உள்ளே புகுந்தனர்.
அவர்களிடம் கலெக்டர் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார் என கூறிய மாவட்ட ஆட்சியரின் நேர்முக பொது உதவியாளர் பிரவீனா குமாரி மற்றும் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.