இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தரக்குறைவாக விமர்சித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக மாநில தலைமையை கண்டித்தும் அண்ணாமலை பேசியதை கண்டித்தும் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன