பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொசவம்பாளையம் சாலை பிரிவு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வ பெருந்தகையை குறித்து அவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு வைத்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோபி பங்கேற்று நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புண்ணியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அப்போது நடிகர் சூர்யா பிதாமகன் படத்தில் லேகியம் விற்பது போலவும் சூர்யாவின் முகத்திற்கு பதிலாக அண்ணாமலையின் முகத்தை மாடலிங் செய்து அதேபோல திகில் படத்தில் நடிகர் விஜய் முகத்தை மாடலிங் செய்து அண்ணாமலை முகத்தை மாற்றி நடிகர் சுந்தர்ராஜன் முகத்தை மாடலிங் செய்து அண்ணாமலையின் முகத்தை சித்தரித்து பதவிகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.