மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது.

முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாரதனை நடந்தது.தொடர்ந்து கோ சாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை என்னும் பசுமாடு -கன்றுக்கு கோ பூஜை செய்து தீபாராதனை செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்று மாடு மற்றும் கன்றுக்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வணங்கினர்.

இதே போல் பிரம்மபுரீஸ்வரர்ஸ்வாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேவாரப் பதிகங்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *