திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் இடமாக 5 கட்டங்களாக ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், கோவிந்தகுடி, நல்லூர், கண்டியூர் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக நேற்று வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலங்குடி, திருவோணமங்கலம், பாப்பாக்குடி, நார்த்தங்குடி, கொட்டையூர், அரவூர், மாணிக்கமங்கலம், சாரநத்தம், பூனா இருப்பு, பூந்தோட்டம் ஆகிய 10 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இம் முகாம்களில் மின்சார வாரியம் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், பட்டா கோருதல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கோருதல் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரப்பட்டன.

மேற்படி முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான நிர்வாக ஆணையை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மனோகரன் மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன், வலங்கைமான் கிழக்கு ஒன்றியதிமுக ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ .தட்சிணாமூர்த்தி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் காந்திமதி ஞானசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *