மதுரையில்
திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் ராம. வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் அமர்நாத் தொடக்க உரையாற்றினார்.
நிர்வா கிகள் புலவேந்திரன்,சந்தானம், ரவிச்சந்திரன், கருப்பையா உள்ளிட்ட
அறிவுரைஞர் குழு உறுப்பினர் ஜெயபால் சண்முகம் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் சந்திரன் நன்றி கூறினார். மாணவர் பேரவையினரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசு முறை கேடாக நடத்தி வரும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பினர்.