அனைத்துலகப் பொங்கு தமிழ்ச்சங்கம் -தமிழ்நாடு அதன் நான்காம் ஆண்டு தொடக்க விழா நூல்கள் வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா,கவியரங்கவிழா, என்னும் ஐம்பெரும் விழா விழுப்புரம் ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவின் முதற்கண் தமிழ் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது, அடுத்து புதுச்சேரி கலைமாமணி இராஜாராமன் அவர்களின் வாய் இசை கருவி பாடல்கள் இசைக்கப்பட்டது, “தமிழா தமிழே ” -என்னும் தலைப்பில் இளம் சாதனையாளர் கிரிதர் பேசினார். வயலின் கீபோர்டு இசைக்க, வாய்ப்பாட்டு பிரசன்னசிவா ஸ்ரீகாந்த் சிவா ஆகியோர் பாட இனிதே தொடங்கியது.
பாவலர் சுந்தர பழனியப்பன் தலைமை தாங்கினார் பொருளாளர் முனைவர் க.அரிகிருஷ்ணன் வரவேற்ப்புரை வழங்க, முதன்மை செயலாளர் கரூர் முனைவர் தமிழ்மணி தொடக்க உரையாற்ற, செயலாளர் வேலூர் முனைவர் ஞா.சுஜாதா நோக்கவுரை வழங்க, நிர்வாக செயலாளர் கோவை இராஜேஸ்வரி ஆண்டு அறிக்கை வழங்கினார். மேலாண்மை செயலாளர் , திருநெல்வேலி பாப்பாகுடி முருகன், மொழியில் மேம்பாட்டு செயலாளர், காரைக்குடி பாரதி ராணி, தனித்தமிழ் மேம்பாட்டு செயலாளர் திருத்தணி மாசிலாமணி, கல்வி மேம்பாட்டுச் செயலாளர் காரைக்கால் சத்யா, முத்தமிழ் மேம்பாட்டு செயலாளர் பண்ருட்டி பாண்டு கொள்கை விளக்க செயலாளர் சேலம் ஜீவா,ஒருங்கிணைப்பு செயலாளர் சேலம் அகிலா ஜோதிலிங்கம், நெறியாளுகைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயலட்சுமி, காரைக்கால் மாநில பொறுப்பாளர், சேத்தூர் சீதா கலியபெருமாள், புதுவை மாநில பொறுப்பாளர் ராஜேஷ் மக்கள் தொடர்பு செயலாளர் மூங்கில்துறைப்பட்டு ஜெரினா, கரூர் மாவட்ட பொறுப்பாளர் வாசுகி தமிழ்மணி மற்றும் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தார்கள்,
விழாவில் மயிலம், பொம்மைபுரம் 20-வது பட்டம் குருமகா சன்னிதானங்கள் திருப்பெருந்திரு சி. சிவஞானபலய சுவாமிகள் அவர்கள் கோவை பேரூர் திருப்பெருந்திரு சாதலிங்க மருதாசல அடிகளார் ஆசியோடு நூல்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.