திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்தும், காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்ட முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சி பி ஐ (எம்)விவசாய சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், சிபிஐ தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நீடாமங்கலம் சிபிஐ விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டேவிட், வலங்கைமான் சிபிஜ விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா, சி பி ஐ மாவட்ட நிர்வாக குழு ஞான மோகன், சிபிஐ ஒன்றிய செயலாளர்கள் நீடாமங்கலம் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் எஸ்.எம். செந்தில் குமார், வலங்கைமான் சி பி எம் ஒன்றிய செயலாளர் என். ராதா, நீடாமங்கலம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட விவசாயி சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலை மறியல் செய்து கோசம் இட்டனர். போராட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ரயி ஐஸ்ல் மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.