தென்காசி மாவட்டம் ஆலங்குளம்
ஊராட்சி ஒன்றியம் கீழக்கலங்களில் உள்ள டி.டி.டி ஏ தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு அறிவித்த காலை சிற்றுண்டி திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது
ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார் ஊர் நாட்டாமை மனோகரன் ,
மணிகுட்டி முன்னாள் ஆசிரிய பாப்பா ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமுவேல் சுந்தர்ராஜ் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்புறை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் வர்கீஸ் ராஜா
ராக்கெட் மதன் விஜயன் தம்பிதுரை மகேந்திரன் அமுல்ராஜ் முரளி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்
காலை சிற்றுண்டி பணியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியை செல்வரதி நன்றி கூறினார்